Type Here to Get Search Results !

ஒழுக்கத்தை கடைப்பிடித்தாள் சமூகத்தில் உயர்ந்த மனிதர்களாவது நிச்சயம் வரவேண்டும்

ஒழுக்கத்தை கடைப்பிடித்தாள் சமூகத்தில் உயர்ந்த மனிதர்களாவது நிச்சயம் வரவேண்டும்
ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் சமூகத்தில் உயர்ந்த மனிதர்க ளாவது நிச்சயம் என்றார் கொங்கு பாலிடெக்னிக் தாளாளர்.
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 38 -ஆவது பட்டயம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாசலம் தலைமை வகித்து பேசியதாவது:

இங்கு பட்டயம் பெற்று செல்லும் நீங்கள் புதிய வாழ்வை தொடங்க இருக்கிறீர்கள். நற்பண்புகளை கடைப்பிடித்து இந்த சமூகத்துக்கு உதாரண மனிதர்களாக நீங்கள் விளங்க வேண்டும். கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒழுக்கமும் முக்கியம். ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் சமூகத்தின் உயர்ந்த மனிதர்களாவது நிச்சயம் என்றார் அவர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெருந்துறை தீயணைப் புத்துறை நிலைய மேலாளர் எம் நவீந்திரன் மாணவர்களுக்கு பட்டயச் சான்றுகளை வழங்கி பேசியதாவது: பாலிடெக்னிக் கல்வி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது.

எதிர்காலத்தில் பயன் தரக்கூடிய கல்வியாக பாலிடெக்னிக் பட்டய படிப்பு விளங்கும். 2024 -ஆம் ஆண்டில் 30 ஆயிரத்துக் கும் மேற்பட்டவர்கள் பணி ஓய்வு பெற உள்ளதால் உங்களுக் கான அரசுப்பணி வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த அரசுப்பணிகளை பெறுவதற்கு நீங்கள் பயிற்சி தேர்வு மையத்தில் முறையாக பயிற்சி பெற்று கடுமையாக உழைத் தால் நிச்சயம் அரசுப்பணி கிடைக்கும். வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி னார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் வேதகிரீஸ்வரன் வரவேற்றார்.
கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா முன்னிலை வைத்தார். பள்ளியின் துணை முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார்.விழாவில் 365 மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவை தொடர்ந்து “விபத்தில்லா தீபாவளி பண்டிகை- 2023” என்ற தலைப்பில் தீபாவளி பண்டிகை ஒட்டி பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு நிலைய மேலாளர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் செய்முறை விளக்கங்களை செய்து காட்டினர்.நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை மின்னியல் துறை தலைவர் எம்.பெரியசாமி, தேர்வு கட்டுப்பாட்டு துறை தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.