Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு


ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் நேற்று அமைச்சர் அன்பில் 
மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
மாணவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்
ஈரோடு, நவ.22 -

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திடீரென அரசு பள்ளிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிக்கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து மேற்கொண்டார். பின்னர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது
நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். இது பெருமையாக உள்ளது. நமக்கு என்று ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது....

ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு, பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்படும் நூலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் அலுவலகங்கள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகோஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , தமிழ்நாடு முழுவதும் பயணித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் நூலகங்கள், பள்ளிகள், கல்வித்துறை அலுவலர்களின் அலுவலங்களில் ஆய்வு செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆய்வுகளை மேற்கொண்டார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பெருத்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு தொகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் 234/77 ஆய்வின் 100-வது ஆய்வை தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் நிறைவு செய்தார். 
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள
 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களிடம் உரையாடினார். மேலும், பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை தேங்கவிடாமல் உடனுக்குடன் நிறைவேற்றுமாறும், அரசின் பள்ளிக் கல்வித்துதை சார்ந்த திட்டங்களை எவ்வித தொய்வும் இல்லாமல் அலுவலர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் உட்பட துறை சார்ந்த அலுலவர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.