தி ஆப்டிமஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழாவெகு சிறப்பாக நடைபெற்றது .இவ் விளையாட்டு விழாவில் பள்ளியின் தாளாளர் எம். சின்னசாமி, மற்றும் துணைத் தாளாளர் ராமமூர்த்தி மற்றும் கே.சுப்பிரமணியன், செயலாளர் வெங்கிடுசாமி மற்றும் பள்ளியின் முதல்வர் ரேணுகா, துணை முதல்வர் சதீஷ்குமார், தலைமை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் எம் சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களை ஊக்குவித்தார். மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. விளையாட்டு விழாவில் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் அளிக்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது நாட்டுப்பண்ணுடன் இவ் விழா இனிதே நிறைவுற்றது*