ஈரோடு திண்டல் புறவழிச்சாலை பகுதியில் நேற்று நள்ளிரவில் சொகுசு காரில் 5 இளைஞர்கள் பயணம் செய்தனர். அப்போது காரின் கண்ணாடியை திறந்து கதவின் மீது அமர்ந்து கொண்டு மதுகுடித்தபடி கையில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கூச்சலிட்டபடி சாலையில் வேகமாக வலம் வந்து கொண்டிருந்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து செல்போன்களில் இளைஞர்களின் அத்துமீறல்களை பதிவு செய்து செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். கையில் மதுபாட்டில்களுடன் இளைஞர்கள் காரில் பயணிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இளைஞர்கள் பயணித்த கார் ஈரோடு பதிவு எண் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.