Type Here to Get Search Results !

திருச்செந்தூர் தொடங்கும் கந்த சஷ்டி விழா சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர்  நாளை தொடங்கும் கந்த சஷ்டி விழா  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது.

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்
கந்த சஷ்டி திருவிழா நாளை காலை கோலாகலமாகத் தொடங்குகிறது.
நாடு முழுவதும்
தீபாவளி திருநாள் கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விரதம் இருக்க பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் தீபாவளியைப் பொருட்படுத்தாமல் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தங்களின் உடைமைகள், பனை ஓலைப்பாய்களுடன் விரதம் இருக்க குவிந்து வருகின்றனர்.

தொடர்ந்து நாளை அதிகாலை முதல் கடலில் புனித நீராடீய பக்தர்கள் 6 நாட்கள் கோவிலில் தங்கி விரதம் மேற்கொள்வார்கள்.

பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தைச் சுற்றியும்
பல்வேறு பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கும் வகையில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதுமேலும் பக்தர்களுக்குத் தேவையான
குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.

* 7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம்நாளான 18-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

* 7-ம் நாளில் 19- ம் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.