Type Here to Get Search Results !

ஈரோடு கருங்கல்பாளையம் (போர்வெல்)தண்ணீர் சாயக்கழிவுகளாகவெளியேறும் அவலம் ..கண்டுகொள்ளாத ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்

பெருந்துறை சிப்காட்டாக மாறி வரும் ஈரோடு கருங்கல்பாளையம் 
ஆழ்குழாய்கிணறுகளில்
 (போர்வெல்)தண்ணீர் சாயக்கழிவுகளாக
வெளியேறும் அவலம் கண்டுகொள்ளாத ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்

ஈரோடு நவ 5
பெருந்துறை சிப்காட்டாக மாறி வரும் ஈரோடு கருங்கல்பாளையம் 
ஆழ்குழாய் கிணறுகளில் ( போர்வெல்) தண்ணீர் சாயக்கழிவுகளாகவெளியேறும் அவலம் கண்டுகொள்ளாத ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 
ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான சாய சலவை தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்த ஆலைகள் விதிமுறைகளை மீறி கழிவு நீரை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் மக்கள் புற்றுநோய், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர் .

பெருந்துறை சிப்காட்டில் ஆரம்பகால கட்டத்தில் பெரிய அளவில் இதைக் கண்டு கொள்ளாத காரணத்தால் தற்பொழுதுபெருந்துறை முழுவதும்நிலத்தடி நீர் மாசுபட்டு அந்தத் தண்ணீர் எதற்கும் பயன்படுத்தும் முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது விவசாயிகள் , பொதுமக்கள் , சமூக அலுவலர்கள் பலரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது இந்த பிரச்சனை ஈரோடு நகரை நோக்கி வந்துள்ளது
 
இதுகுறித்துநாம் தமிழர் கட்சியின் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் துணைத் தலைவர் கணேசன் கூறியதாவது 
ஈரோடு கருங்கல்பாளையம் 34 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஸ்ரீ செந்தில் முருகன் டையிங் மில்ஸ் , கிளாசிக் பட்டறை ,என 10க்கும் மேற்பட்ட சாயத் தொழிற்சாலைகள் இங்கு இயங்கி வருகின்றன .இந்தப் பகுதியில்5000 குடும்பங்களை சேர்ந்த20000பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் இந்த பகுதியில் 5 வருடங்களுக்கு முன்பாகவே தாழ்வான பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் வரும் தண்ணீர் கெமிக்கல்( ஆசிட் ) வாடையில் வந்து கொண்டிருந்த நிலையில் இதை கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் தற்பொழுது இந்த பிரச்சனை மேடான பகுதியான கருங்கல்பாளையம் மரப்பாலம் 5,6,7,8,வீதிகளில் குடியிருப்பு பகுதியில்வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில்சாயக்கழிவு தண்ணீர் நுரையுடன் கடந்த இரண்டு மாதங்களாக வந்து கொண்டுள்ளது . தற்பொழுது இந்த தண்ணீர் குளிக்கவும் மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் முடியாத நிலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர் .இதுபோல் நிலத்தடி நீர் கெடுவதற்கு இங்கு சுற்றியுள்ள சாயப்பட்டறைகளே காரணமாக இருக்க வேண்டும் என்றும் சாயப்பட்டறைக்குள்ஆழ்குழாய்  கிணறு அமைத்து சாயக் கழிவுகளை உள்ளே விட்டுக் கொண்டிருக்கலாம் எனபொதுமக்கள் சந்தேகப்படுவதாகவும்இதனால் சம்பந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் சாயத் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .
பொதுவாகவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாலும் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றும் நோக்கத்தில்நடவடிக்கை எடுக்காமல் தட்டி கழிப்பதாகவும்கூறுகின்றனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.