ஆட்டோ ஓட்டுனர்களுக்கு20 நபர் களுக்கு தலா 5500 ரூபாய் விகிதம் மொத்தம் 1,10.000 ரூபாய் போனஸ் வழங்கினார்.
November 04, 2023
0
ஈரோட்டில் அம்மா பேரவை ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அஇஅதிமுக ஈரோடு மாவட்ட பெரியார் நகர் பகுதி கழகச் செயலாளர் முன்னாள் மண்டல தலைவர் இரா. மனோகரன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர் 20 நபர்களுக்கு தலா 5500 ரூபாய் விகிதம் மொத்தம் ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கினார். இதில் ஆவின் முன்னாள் சேர்மன் கேகே. காளியப்பன், கௌரவ தலைவர் சிஆர். நாச்சிமுத்து, தலைவர் எம்.ராஜா,செயலாளர் கே.வேல்முருகன், மற்றும் பொருளாளர் எல். தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags