தமிழகமுதலமைச்சர்
மு.க ஸ்டாலின் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சந்தித்துஅவர்களுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார்
--------------------------------------------:
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் கட்சியின் முக்கிய தலைவருமான பிரியங்கா காந்தியும் இன்று சென்னை வந்தனார். இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து அமைக்கப் பட்டுள்ள கூட்டணியின் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க.வின் சார்பில் அக்கட்சி எம்.பி. கனிமொழி முன்னிலையில் இன்று நடைபெற்றது மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.தமிழகமுதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சந்தித்துஅவர்களுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார் பின்னர்
அங்கு நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார். அக்கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடுத்த வருடம் நடைபெற விருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.ஆலோசனை கூட்டம் பகல் 11:00 மணியளவில் நடைபெற்றது .காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட தேர்தலை சந்திக்க அணுகும்றைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு பேச்சு குறித்தும் அவர்கள் ஆலோசனைசெய்யவிருக்கிறார்கள்.
முன்னதாக கூட்டணி கட்சியுனருடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுமாறு அவர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.