Type Here to Get Search Results !

ஈரோட்டில் சக்தி தேவி அறக்கட்டளை சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகம் நடைபெற்றது

ஈரோட்டில் சக்தி தேவி அறக்கட்டளை சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகம் நடைபெற்றது ;
சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமான சக்தி மருத்துவமனை மூலமாக கடந்த 22 ஆண்டுகளாக இலவச மருத்துவ ஆலோசனை களையும், சலுகை விலையில் மருந்துகள் வழங்கியும் மற்றும் செய்து வருகிறது அவ்வப்போது இலவச சிறப்பு மருத்துவ முகாம்களை மருத்துவ நடத்தியும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை அமைப்புச்சாரா நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து, நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கி அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமினை 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.05 மணி அளவில் பெருந்துறைரோடு சக்திதுரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது... சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் P.C Dr. துரைசாமி Dr. சாந்தி துரைசாமி அவர்களும் விழாவிற்கு முன்னிலை வகித்து P.C Dr. துரைசாமி அனைவரையும் வரவேற்றும் வரவேற்புரையாற்றினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். முனைவர். வெ. இறையன்பு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளான 150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிதாக பதிவு செய்து நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் 2 செட் சீருடை வழங்கி, நல்வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி விழா சிறப்புரையாற்றினார். ஈரோடு மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  T.முருகேசன் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் சக்தி மருத்துவமனையின் மருத்துவர்கள், தன்வந்திரி மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும்,  குடும்பத்தார் களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள் ஈரோட்டின் முக்கிய பிரமுகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அறக்கட்டளையின் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைசிறப்பித்தனர் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் விழாவிற்கான
ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.