ஈரோட்டில் திமுக உறுப்பினர்கள்
அனை வரும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூட்டத்தில் முடிவு
ஈரோட்டில் திமுக உறுப்பினர்கள் அதிருப்தி
ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டில் அமைந்துள்ள அசோகபுரம் விசைத்தறி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் கூட்டுறவு பண்டக சாலையில் உள்ளது இதன் தேர்தலில் 14-வது வார்டை சேர்ந்த திமுக உறுப்பினர்களை புறக்கணிக்கப்பட்டு, வேறு வார்டு திமுக உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் 14-வது வார்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் அதிருப்தியில் தெரிவித்தார் .இதன் காரணமாக உடனடியாக 14-வது வட்டக் கழகத்தை சேர்ந்த திமுக உறுப்பினர்கள், அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு 14-வது வார்டு செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். பிரதிநிதி கார்த்தி முன்னிலை வகித்தார்.இந்த அவசர கூட்டத்தில் கட்சிக்காக உழைத்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், வேறுபாடு உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், உண்மையாக கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கவில்லை என்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேலும் மாநகராட்சி 14-வது வார்டு திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால் அனைவரும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூட்டத்தில் தனது ஆதங்கத்தினை தெரிவித்தனர்.
மேலும் இந்த கண்டன கூட்டத்தில் 14-ஆவது வட்ட கழகத்தை தவிர, வேறு மாவட்ட, வேறு வார்டை சேர்ந்தவர்களை கூட்டுறவு சங்கத்திற்கு பொறுப்பாளர்களை நியமிக்க கூடாது,
14-வது வார்டைச் சேர்ந்த உறுப்பினர் திமுக உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும்,
நலிவடைந்த திமுக உறுப்பினர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.