பாதுகாப்பின்றி வெடி பொருட்கள் கொண்டு வந்த வாலிபர் மீது வழக்கு
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த புஞ்சை துறையம்பாளையம் பள்ளம் அருகே பங்களா ப்புதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒரு வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் டி.என்.பாளையம் அடுத்த வாணி ப்புத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த லட்சுமணன் (25) என்றும் சாக்கு பையில் 50 ஜெலட்டின் குச்சிகள், 40 மின்சார அல்லாத டெட்டனேட்டர், 22 மின்சார டெட்டனேட்டர் என வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விவசாய சம்ப ந்தப்பட்ட தேவைகளுக்காக சங்ககிரி தனியார் வெடி மருந்து கிடங்கில் இருந்து வெடி பொருட்கள் வாங்கி வந்து வெடி மருந்து வாங்கியதற்கான ரசீது லட்சுமணன் வைத்திருந்தார்.ஆனால் முறையான பாதுகாப்புடன் வெடிமருந்து பொருட்களை கொண்டு வராமல் பொது வழியில் அஜாக்கிரதையாக மொபட்டில் கொண்டு வந்ததற்கு லட்சுமணன் மீது பங்களாப்புதூர் வழவழக்கு பதிவு செய்தனர். மேலும் லட்சுமணன் மொபட்டில் கொண்டு வந்த வெடிமருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.