இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து
பேசிய அவர், “அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு தினசரி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் தினமும் காலையில் காய்கறிகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் சேரும் நிலையை அறிந்த ரத்னா ரெசிடென்சின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து வீரபத்ரா மூன்றாவது வீதி முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு அப்பகுதியை சுத்தமுள்ள பகுதியாக உருவாக்கினர். மேலும் சுவர்களில் வெள்ளை அடித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். இச்செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் ரத்னா ரெசிடென்சி நிறுவனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.