Type Here to Get Search Results !

ஈரோடு பெருந்துறை சிப்காட்டில் அமைச்சர், ஆட்சியரும் ஆய்வு!

ஈரோடு பெருந்துறை சிப்காட்டில் அமைச்சர், ஆட்சியரும்  ஆய்வு!
 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சித் தலைைர் ராஜகோபால் சுங்கரா IAS  ஆகியோர் பெருந்துறை சிப்காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.  மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்டசுற்றுச் சூழல் பொறியாளர் எஸ்.பழனிச்சாமி, உதவிப் பொறியாளர் டாக்டர் என்.ராஜ்குமார், சிப்காட் திட்ட அலுவலர் எஸ்.எஸ்.வெங்கடேசன், உதவி பொறியாளர் செல்வி சுஜா பிரியதர்ஷினி, பெருந்துறை வட்டாட்சியர் பூபதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயபால், காவல் ஆய்வாளர்கள் மசூதா பேகம், சரவணன்  உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், சென்னிமலை யூனியன் சேர்மன் காயத்திரி இளங்கோ, திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.பி.சாமி (பெருந்துறை தெற்கு), பி.செங்கோட்டையன் (சென்னிமலை வடக்கு), பெருந்துறை பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
இதில், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் வி.எம்.கந்தசாமி, ஓ.சி.சண்முகம், பி.சிவக்குமார், பல்லவி கே.பரமசிவம், கே.மணி, என்.நக்கீரன்,   சி.மோகன்ராஜ், ஆர்.நடராஜன், கே.ஏ.சக்திவேல், டி.பி.கனகராஜ்  உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள், சிப்காட் வளாகத்தில் வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புககளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஏற்கனவே நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆய்வுகள் அடிப்படையில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கி, நமது கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

பின்னர், மாசடைந்த கழிவு/கசிவு  நீரை வெளியேற்றியதற்காக, மின் இணைப்பும், தண்ணீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ள ரோகா பாரிவேர்  என்ற பீங்கான் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையையும், கழிவு/கசிவு நீர் வெளியேறும் நல்லா ஓடையையும்  பார்வையிட்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட / பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வுகள், சிப்காட் கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு அமைச்சரின் வாக்குறுதிகளை விரைவில் செயல்படுத்திடவும், சிப்காட் மாசு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணவும் தொடர் நடவடிக்கைகளை வோண்டும் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.