Type Here to Get Search Results !

மொடக்குறிச்சிபுதிய கலையரங்கத்தை டாக்டர் சி.சரஸ்வதி திறந்து வைத்தார்

மொடக்குறிச்சி. புதிய கலையரங்கத்தை டாக்டர் சி.சரஸ்வதி திறந்து வைத்தார் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி (2022-23) மூலம் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா இன்று 13.10.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றதுநிகழ்வில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் சி. சரஸ்வதிகலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வி இளங்கோ, பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், குளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.