ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு
தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சிறு தொழில் நிறுவனங்கள் சார்பில் மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலை கட்டணம் பரபரப்பு நேர கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்,3பியில் இருந்து 3ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை செயார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.