பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன நாட்டிற்கு இந்தியாவின் ஆதரவை தொடர வேண்டும்எனவலியுறுத்தியும் ,மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும்ஈரோடுஒருங்கிணைந்த மாவட்ட SDPI கட்சியின் சார்பாக (அக்.13) கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் A.M.முஹசின் காமினூன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பளராக மாநில கலந்து கொண்ட பேச்சாளரும் கோவை மாவட்ட பொதுச்செயலாளருமான கோவை. காதர் கண்டனஉரையாற்றினார்.
இப்போராட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் A.சமீருல்லா, மாவட்டச் செயலாளர் கலியுல்ரஹ்மான், செயற்குழு உறுப்பினர் அஜ்மல் ஹுசைன், ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் குறிஞ்சி.பாஷா, மு.ஜமால்தீன், மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அ.ஃபர்ஹான் அஹமது, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர்கள் ஆட்டோ அப்துல் ரகுமான், கோபிசெட்டிபாளையம் தொகுதி தலைவர் தஸ்தகீர் ராஜா, இணைச் செயலாளர் சர்ஜித், பவானிசாகர் தொகுதி செயலாளர் சுஹைல் ஷெரிப், முகமது அலி, பவானி தொகுதி தலைவர் முகமது ஜாபீர், செயலாளர் தர்வேஸ் மைதீன், இணைச்செயலாளர் லியாகத் அலி பொருளாளர் ரியாஸ் சம்சுதீன், ஈரோடு மேற்கு தொகுதி துணைத் தலைவர் அப்துல் சலாம், பவானி நகர தலைவர் முகமது அகீல், ஈரோடு மாநகராட்சி 7வது வார்டு தலைவர் ரசூல் மைதீன், 15வது வார்டு செயலாளர் ஜியாவுதீன், 37வது வார்டு செயலாளர் முகமது பர்மானுல்லா உள்ளிட்ட வார்டு, கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் போது காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.