தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் நினைவு நாள் முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா.!ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அஹிம்ச மூர்த்தி மகாத்மா காந்திஜி பிறந்த நாள், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் நினைவு நாள் முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சியாக ஈரோடு மாநகராட்சியில் அமைந்துள்ள மகாத்மா காந்திஜி திருஉருவ சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருசெல்வம் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன் மாலை அணிவித்தார் இரண்டாம் நிகழ்ச்சியாக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜ் திருவுருவ சிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எ. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மூன்றாம் நிகழ்ச்சியாக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியவர்கள் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம்.ஜவஹர் அலி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!!
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர், எச் எம் ஜாபர் சாதிக்,ஈரோடு பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய்கண்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி எம் கே செந்தில் ராஜா,மாவட்ட துணைத் தலைவர்எம்.ஆர்.அரவிந்தராஜ்,மாவட்ட பொதுச்செயலாளர்களான இரா. கனகராஜன், கராத்தே யூசுப், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அகமது, ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம்.தீபா, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என். பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் எஸ்.முகமது யூசுப், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு முன்னாள் தலைவர் கே பி சின்னசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் சிந்தன் நகர் குருசாமி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு தலைவர் சி எஸ் கார்த்திக், முன்னாள் மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், மாவட்ட நிர்வாகிகளான ஈ எம் சிராஜுதீன், ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், சம்பத் நகர் வார்டு தலைவர் ஜீ. வேணு கோபால், வாட்டர் சிவாஜி கணேசன், சூரம்பட்டி விஜயகுமார் மரப்பாலம் அய்யூப் கான்,நூருதீன், சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகி தங்கவேலு, மாடசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.