போக்சோ வழக்குகளில் ஐகோர்ட்....
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் மகள் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் வீட்டில் உள்ள தனது உடமைகளை எடுக்க சென்ற போது, தாய் மாமாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.இதில் பதிவான போக்சோ வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிறுமியின் தாய் மாமா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரண்டாவது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக மனுதாரர் தரப்பில் கூறினாலும், இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர் போலீஸ் விசாரணைக்கு தேவைப்படுகிறார்.திரை மறைவில் ஒளிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது.
இதுபோன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனும், அந்த குழந்தையின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதும் தான் முக்கியம். அதனால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்