ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பசுவபட்டியில் வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த அர்ஜுனன் என்ற நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்து முன்னணியின் தாக்குதலுக்கு உள்ளாகினர். இது தொடர்பாக இந்து முன்னணியின் நிர்வாகிகள் இருவர் மீது சென்னிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்..
இந்த விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வர சுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது பேசிய அவர்,
கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இந்து முன்னணியின் நரை கடுமையாக திட்டுவதை கண்டித்து நாளை 12.10.23 நிச்சயம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்...குழந்தைகளுக்கு இயேசுவை போதித்ததால் தான் இந்து முன்னணியினர் தாக்கினர்.. சட்ட விரோதமாக ஜெபம் செய்ததோடு தகராறு செய்வதற்காகவே ஜெபம் செய்துள்ளனர்...சட்டவிரோதமாக வீட்டில் ஜெபம் செய்தது குறித்து சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்விதநடவடிக்கையும்
எடுக்காததை கண்டிக்கிறோம்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இரட்டை வேடம் போடுகிறார்.கோவில் நிலங்களை மீட்டதாக சொல்லும் மீட்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.பல்வேறு அமைப்புகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்த நிலையில் இந்து முன்னணியினருக்கு அனுமதி மறுத்தால் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.