கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட மாநகர திமுக வீரப்பன்சத்திரம் பகுதி கழகம், 23,-வது வட்ட கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாமினை ஈரோடு திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சளி மற்றும் காய்ச்சல்,சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம், குடல் புண், முதுகு தண்டு நோய்கள் போன்ற நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் இல்லம் தேடி மருத்துவம் என்ற அடிப்படையில் வீட்டிற்கு நேரிலேயே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் பல பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஈரோடு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.