ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ள காளிங்கராயன் பாளையம் ராஜா கலையரங்கத்தில் ஜப்பான் ஷிட்டோரியூ கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சென்செய்
பாலச்சந்திரன் தலைமையில்
நடைபெற்றது.ஈரோடு
கோஜூகான் கராத்தே
அசோசியேசன் பள்ளி மாணவ, மாணவியர்கள் கராத்தே போட்டியில்
குமித்தே பிரிவில் குகனேஸ்வரன், சுஜந்த் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். கட்டா பிரிவில் அர்ஜுன்,அபிரா மித்துன்ராஜ் ஆகியோர் முதல் பரிசும் பெற்று
வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு
கராத்தே எஸ்.ஏ.நாவலன்
பரிசுகள் வழங்கினார்.
கராத்தே மாஸ்டர்
பிரபாகரன் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை வாழ்த்தினார்.