ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குளூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, கிராம சபை கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், கு;ர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, கிராம சபை கூட்டம்;, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்மாவட்டஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கிராம சபை கூட்டமானது, ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா, குடியரசுதின விழா, மே தினம், காந்திஜெயந்தி, உலக தண்ணீர் தினம் மற்றும் ஊராட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் மற்றும் சிலமுக்கியமான தினங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளான இன்று (02.10.2023) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவுத்திட்டம், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், இதற்கெல்லாம் சிறப்பு சேர்க்கின்ற வகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூரில் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஊரகப்பகுதிகளில் மழைநீரினை சேமிப்பதனை முனைப்புடன் செயல்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட்டு மழைநீர் சேகரிப்பினை ஒருமக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும் அனைவரும், மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து குக்கிராமங்களிலும்ஒட்டுமொத்த துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்யவேண்டும்.
மேலும், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் தெளிந்தநீர்த் தொட்டி, பயன்பாடற்ற பானைகள்,குளிர்சாதன பெட்டி பின்புறம், பழைய டயர், தேங்காய் மட்டைகள், செடிகள் வளரும்தொட்டி ஆகியவற்றில் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். மேலும், புதிய கட்டுமான பணிகள்நடக்குமிடங்கள் மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமலும், அவற்றை முறையாக அகற்றியும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும்நெகிழியினை முழுமையாக தடை செய்தல், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும்நெகிழி இல்லாத கிராமங்களை உருவாக்குதல், பொது இடங்களில் குப்பை கொட்டினால்அபராதம் விதிப்பதுடன், அனைத்து பொது இடங்களும் குப்பையில்லாமலும், திறந்த வெளியில்மலம் கழிக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து வீடுகளிலும்திடக்கழிவுகள் தரம் பிரிப்பதை உறுதி செய்தல், தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை மட்டுமே தூய்மை காவலர்கள் சேகரம் செய்தல் மற்றும் திடக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வழி முறையை மேம்படுத்துதல் வேண்டும். அனைத்து சுகாதார உட்கட்டமைப்புவசதிகளின் நிலைத்த மற்றும் நீடித்த செயல்பாட்டை உறுதி செய்வதோடு, கழிப்பறைவசதி, திட மற்றும்திரவக்கழிவு மேலாண் மையில் கிராம ஊராட்சி நிறைவுற்ற நிலையினை அடைந்திட தேவையான வசதிகளை கண்டறியும் நோக்கில் கிராம ஊராட்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் மற்றும் அதற்கான திட்ட அறிக்கையினை தயாரிக்க வேண்டும். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ்ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கென ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தேவைகள் குறித்து திட்டங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும், அதே போன்று மகளிர் திட்டத்தின் சார்பில் பெண்களின் சுய முன்னேற்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதனை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தமிழக அரசின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தங்களின் ஊராட்சி சிறந்த ஊராட்சியாக திகழ்வதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; எனவும், மேலும் தங்களது ஊராட்சி ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இவ்விருதை பெற்ற ஊராட்சிக்கும் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இன்றைய கிராமசபைக் கூட்டத்தில்;, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2023 முதல் 30.09.2023 முடிய) திட்ட பணிகள் குறித்தும்;, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல் குறித்தும்;, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்;, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்தும்;, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்;, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் 30ம் தேதி வரையிலான பணிகள் முன்னேற்றம் குறித்தும்;, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (2023-24 மற்றும் 2024-25) குறித்தும்;, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கத்தில் பணிகள் குறித்தும்;, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொது மக்களுக்கு அறிவித்தல் குறித்தும்;, , கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் குறித்தும்;, மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும்;, காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் குறித்தும்; மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக, கிராம சபை கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள முத்தான திட்டங்களான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம் மற்றும் ‘எல்லாருக்கும் எல்லாம்” என்ற தலைப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை ஆகியவை அடங்கிய வீடியோ படக்காட்சிகள் திரையிடப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கு;ர் ஊராட்சியில் பணியாற்றும் துய்மை காவலர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கணபதி, இணை இயக்குநர்கள் முருகேசன் (வேளாண்மை), பழனிவேல் (கால்நடை பராமரிப்பு), துணை இயக்குநர்கள் .மரகதமணி (தோட்டக்கலைத்துறை), சாவித்திரி (வேளாண் விற்பனை), மகாதேவன் (வேளாண் வணிகம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சூர்யா, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுலவர்கள் திருநாவுக்கரசர், சண்முகபிரியா, குளூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், மொடக்குறிச்சி வட்டாட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்; கலந்து கொண்டனர்.