Type Here to Get Search Results !

தனியார் கோவிலில் உண்டியல் வைப்பதா? இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிர்ப்பு..

தனியார் கோவிலில் உண்டியல் வைப்பதா?    இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிர்ப்பு..
ஈரோட்டை அடுத்த தென்முகம் வெள்ளோடு பகுதியில் ராசா சுவாமி நல்ல மங்கையம்மன் கோயிலை குலதெய்வமாக கொண்டு சாத்தந்தை குலத்தினர் வழிபட்டு வருகின்றனர்.
சாத்தந்தை குல மக்களிடம் மட்டுமே நன்கொடையாக பெற்று இந்த குலதெய்வ கோயில் அமைந்துள்ளதாகவும் பல ஆண்டுகளாக இந்த கோவிலை தங்கள் குல மக்கள் தான் பராமரித்து வருவதாகவும் சாத்தந்தை குலத்தினர் கூறுகின்றனர்.ஈரோடு கொங்கு கலை அரங்கில் கூடிய கொங்கு வேளாள கவுண்டர்கள் சமுதாயத்தின் சாத்தந்தை குலத்தினர் ஊர்வலமாக சென்று சாத்தந்தை குல மக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் முத்துசாமி தலைமையில் செயலாளர் என்.டி.கண்ணுசாமி, பொருளாளர் கே.டி.பொன்னுச்சாமி,
துணைத் தலைவர் நடராஜன், துணைச் செயலாளர்கள் திருமூர்த்தி, தர்மலிங்கம்,
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் மணி கவுண்டர், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.பழனிசாமி, மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேல், கொங்கு வேளாளர் அறக்கட்டளை பேரவை தலைவர் ராஜமாணிக்கம் உட்பட சாத்தந்தை குலத்தை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
இதுகுறித்து சாத்தந்தை குலத்தின் நிர்வாகிகள் கூறுகையில்,
தென்முகம் வெள்ளோடு ராசாசுவாமி நல்ல மங்கையம்மன் கோவிலை சாத்தந்தை குலத்தின் குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம்.
இந்நிலையில் இந்த கோவிலில் கடந்த 13 -ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உண்டியல் வைக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இந்த கோயிலுக்கும் இந்து சமய அறநிலைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறி இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட சாத்தந்தை குலத்தினர் திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

எங்கள் கோவிலுக்கும் இந்துசமய அறநிலைய துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தனியார் கோவில் விவகாரங் களில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவுறுத்தியுள் ளார்.
இது எங்கள் குல மக்களின் உணர்வுகளையும் குல வழக்கத்தையும் புண்படுத்துவதாக உள்ளது. 
ஆனால் இந்த உத்தரவையும் மீறி இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் எங்கள் குலதெய்வமாகிய ராசா சுவாமி நல்ல மங்கையம்மன் கோவிலில் உண்டியல் வைக்க முயற்சித்து வருகிறார்கள்.எனவே இது போன்ற நடவடிக்கைகளில் அந்தத் துறையினர் ஈடுபடுவதை முற்றிலுமாக தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலித்து ஆட்சியரிடம் மனு கொடுத் துள்ளோம் என்று தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.