Type Here to Get Search Results !

விசைத்தறி தொடக்க கூட்டுறவு சங்க தேர்தலில் நெசவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்

விசைத்தறி தொடக்க கூட்டுறவு சங்க தேர்தலில் நெசவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வலியுறுத்தல் 
 தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறி தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்நடத்த கோரி நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதற்குண்டான முதற்கட்ட மகாசபை கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று.
அதன்பின் ஒரு மனதாகவோ அல்லது ஓட்டெடுப்பு மூலமாகவோ தலைவர் துணைத் தலைவர் இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு தொடக்க நெசவாளர் சங்கங்களில் ,
தொடர்ந்து நெசவுத் தொழிலில் ஈடுபடும் நெசவாளர் உறுப்பினர்கள் மற்றும் திமுக நெசவாளர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் பெரும் பங்கு பெற்று துறையே வளர்த்திக் கொண்டு வருகிறார்கள்.விசைத்தறி தொடக்க கூட்டுறவு சங்க தேர்தலில் நெசவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வலியுறுத்தல் வோண்டும்,நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் தலைமை பொறுப்புகளுக்கு நெசவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் தற்போது நெசவாளர் அணியை தவிர்த்து,  மற்ற துறை சார்ந்தவர்கள் அல்லது மாற்று தொழில் செய்பவர்கள் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர் சங்கங்களில் புதிதாக உறுப்பினர் ஆக இணைத்து தலைமை பொறுப்பை ஏற்க பாடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து சங்கங்களில் நெசவாளர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு நெசவாளர் சங்க முன்னோடி கட்சி உறுப்பினர்கள் தலைமைப் பொறுப்பு எடுத்து பணியாற்றினால் அரசுக்கு நற்பெயர் உண்டாகும்.

அதேபோல் வருங்காலங்களில் தங்கள் கட்சியில் நெசவாளர் அணியில் உறுப்பினராக உள்ள ,
தொடர்ந்து கூட்டுறவு தொடக்க நெசவாளர் சங்கங்களில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களை மட்டும்,
 பெரும்பாலும் கூட்டுறவு தொடக்க நெசவாளர் சங்கங்களில் தலைமை பொறுப்பில் செயல்பட  
 தாங்கள் முன்னுரிமை கொடுத்து அவர்கள் கூட்டுறவு பணி தொடர 
ஆணை பிறப்பித்துக் கொடுக்குமாறு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
        


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.