"சென்னிமலையைபாதுகாப்போம்"
சென்னிமலை கோயிலை கிறிஸ்துவ கல்வாரி கோயிலாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்திய "சென்னிமலையை பாதுகாப்போம்"கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 13-10-2023 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னிமலையில் உள்ள பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளர் கிஷோர், மாவட்டத் தலைவர் ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஜெகதீசன், கொங்கு தமிழ் பேச்சாளர் மஞ்சுநாதன், நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரம், ஏராளமான முருக பக்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள்.