தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் "தூய்மையே சேவை" எனும் நிகழ்வு *மாண்புமிகு பாரத பிரதமர் . நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது பற்றியும், நெகிழி கழிவுகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றியும், பள்ளி குழந்தைகளுக்கு குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுப்பது பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் உள்ள சிவகிரி பேரூராட்சி - பேருந்து நிலையம், வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சி - அண்ணமார் கோவில் கால்நடை மருத்துவமனை, மொடக்குறிச்சி நால்ரோடு பஸ் நிறுத்தம், கஸ்பாபேட்டை அரசு ஆரம்பப்பள்ளி வளாகம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகிய பகுதிகளில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் அந்தந்த பகுதியின் ஒன்றிய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒரு குழுவாக கலந்து கொண்டு பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை பணி யில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் நமது இடத்தை தூய்மையாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.