மதச்சார்பின்மையின் முக்கியத்து வத்தை உணர்த்த ஈரோடு மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று பிரச்சாரம்! ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு!
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பில் வருகின்ற டிசம்பர் மாதம் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" என்ற முழக்கத்தோடு மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமக ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் ஈரோடு காவிரி ரோட்டில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.முனாப் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் குறிஞ்சி.பாஷா, மு.ஜமால்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காப்பதும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார் பின்மையை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதையும் அதற்காக நடத்தப்படுகின்ற "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும் ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்வது எனவும்,மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் ஈரோடு தெற்கு மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான நபர்களை அழைத்துச் செல்வது, அதற்கான பணிகளை உடனடியாக துரிதபரிதற்காக தொகுதி, வார்டு, நகர மற்றும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜம்பை.ரபீக், மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் எம்.சபீர் அகமது, செயலாளர் தளபதி கே.எஸ்.பசீர், ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் மஸ்தான், இணைச்செயலாளர் ஜெமீஸ், பவானி தொகுதி தலைவர் முகமது ஜாபிர், பவானி நகர தலைவர் முஹம்மமது அகில் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது நன்றி யாற்றினார்