Type Here to Get Search Results !

பிளக்ஸ் ஜெயலலிதாவுக்கே இடம் இல்லையா.....

பிளக்ஸ் ஜெயலலிதாவுக்கே இடம் இல்லையா...அந்தியூர் கொடுமை
ஷாக் ஆன ரத்தத்தின் ரத்தங்கள்.அதிமுக  உடன்பிறப்புகள்.... _____________________________
ஈரோடு மாவட்டம் அந்தியூர்தொகுதியில் அதிமுக அலுவலக திறப்பு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யனை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலுமாக கட்சியை விட்டே வெளியேற்றி, அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என பட்டமும் கொடுத்துள்ளனர் அதிமுகவினர். ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுகவை வழிநடத்தும் ஆளுமை கொண்டவராக எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிமுகவினர் கொண்டாடுகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை தொடர்ச்சியாக சீண்டி வந்த நிலையில், அதிமுக உடன் கூட்டணி இல்லை என்ற அதிரடியான முடிவையும் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இப்போது, திமுக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். 
இதனால், அதிமுகவினர் பழைய பன்னீர்செல்வங்களாக தேர்தல் பணிகளை நோக்கி தயாராகி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளரான பிறகு, அவரது படங்களை மிகப்பெரிய அளவில் அச்சிட்டு பேனர், போஸ்டர்களை அடித்து வருகின்றனர் அதிமுகவினர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இப்போது ஸ்டாம்ப் சைஸுக்கு போய்விட்டன. அதிமுக மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி படம், கட் அவுட்கள் தான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக அலுவலக த்றப்பு விழா மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அவரை வரவேற்று அதிமுகவினர் பேனர்களை வைத்திருந்தனர்.

இந்த பேனர்கள் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. பெரிய அளவில் எடப்பாடி பழனிசாமி படம், அதிமுக நிர்வாகிகள் படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பேனரில், ஜெயலலிதா படத்தையே காணோம். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக பேனரில் அதற்குள் ஜெயலலிதா படமே காணாமல் போய்விட்டதே என ஜெயலலிதா விசுவாசிகள் முணுமுணுத்தனர்.

இதையடுத்து, ஜெயலலிதாவின் படம் ஒன்றை எடுத்து வந்து, ஏணி போட்டு ஏறி அந்த ஜெயலலிதா புகைப்படத்தை பேனரில் ஒட்டினர். 
நிரந்தர பொதுச் செயலாளர் என அதிமுகவினரால் புகழப்பட்ட ஜெயலலிதாவின் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததோடு, இப்போது ஜெ. படத்தையே தூக்கி விட்டார்களே என அதிமுகவினரே புலம்புகின்றனராம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.