Type Here to Get Search Results !

லாரியில் ரகசிய அறை அமைத்து ஈரோட்டிற்கு போலி மதுபாட்டில்களை கடத்தி வந்த 7 பேர் கைது.

லாரியில் ரகசிய அறை அமைத்து ஈரோட்டிற்கு போலிமதுபாட்டில்களை கடத்தி வந்த 7 பேர் கைது.
2400 போலி மதுபாட்டல்கள் பறிமுதல்.

ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியில் வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.  அப்போது காரில்ஏராளமான மதுபாட்டில்கள் 8 பெட்டிகளில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த முருகன் மகன் நிஜந்தன் (24), வாழப்பாடி மணிசங்கர் (34), புதுச்சேரி அசோக் நகர் பாரதியார் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற ஆதவன் (48) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 384 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் போலி மது பாட்டில்களை தயார் செய்து அசோக் லைலேண்ட் லாரி வாகனத்தில ரகசிய அறை அமைத்து மது பாட்டில்களை அதில் ஏற்றிச்சென்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதிக அளவு மது பாட்டில்களுடன் ஒரு சரக்கு லாரி வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது். இதைத் தொடர்ந்து அந்த வாகனத்திற்காக மதுவிலக்கு போலீசார் காத்திருந்தனர். இதில் அந்த வாகனம் வரும் வழியில் ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்து கொண்டு வந்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை வெண்டிபாளையம் பகுதிக்கு அந்த வாகனம் வந்தபோது மதுவிலக்கு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த அசோக் லைலேண்ட் லாரி வாகனத்தில் டிரைவர் சீட்டிற்கும் சரக்கு ஏற்றும் பகுதிக்கும் இடையில் ரகசிய அறை அமைத்து அதில் 42 பெட்டிகளில் 2400 போலி மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாண்டிச்சேரி சாந்தி நகர், கோயில் வீதி, கந்தசாமி மகன் செல்வம் (48), பாண்டிச்சேரி சாரம், மாரியம்மன் கோயில் வீதியைச் சார்ந்த தட்சிணாமூர்த்தி மகன் உதயகுமார் (23), சென்னை அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி வீதியைச் சேர்ந்த அருள் மகன் விக்கி என்கிற விக்னேஷ் (31), பாண்டிச்சேரி அரியாங்குப்பம் நடராஜன் மகன் சத்யராஜ் (30) என்ற 4 பேர் உட்பட மொத்தம் 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 42 பெட்டிகளில் கொண்டு வந்த 2400 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3,84,000 ஆகும் என மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் ஓட்டி வந்த கார், மற்றும் அசோக் லைலேண்ட் லாரி வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.