ஈரோடு மாநகராட்சிக்கு புதிய ஆணையாளராக (21-10-23) இன்று சிவகிருஷ்ணமூர்த்தி IAS., பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் உள்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி சிவகிருஷ்ணமூர்த்தி IAS., இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக ஐஏஎஸ் அதிகாரி வி.சிவகிருஷ்ணமூர்த்தி சனிக்கிழமை (இன்று) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு நகராட்சியாக இருந்து 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதில் இருந்து ஆணையாளர் பதவிக்கு, நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ளவர்களும், கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் உள்ளவர்களும் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரனுக்கு பதிலாக, ஈரோடு மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரியான வி.சிவகிருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்து, அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக ஐஏஎஸ் அதிகாரி சிவகிருஷ்ணமூர்த்தி சனிக்கிழமை (இன்று) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆணையாளர் வி.சிவகிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சிவகிருஷ்ணமூர்த்தி 2018ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். இவர் இதற்கு முன்பு, நெல்லை, சேரன்மாதேவியில் உதவி ஆட்சியாகவும், நெல்லை மாநகராட்சி ஆணையாளராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது