Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசு போக்குவரத்து1666 புதிய பஸ்கள் வாங்குவதற்கு சாலை போக்குவரத்து நிறுவனம் டெண்டர்

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து1666 புதிய பஸ்கள் வாங்குவதற்கு சாலை போக்குவரத்து நிறுவனம் டெண்டர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 20 ஆயிரம் பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. நகர மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் இந்த பஸ்களை ஏழை, நடுத்தர மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முந்தைய பழைய பஸ்களை மறுசீரமைத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் தவிர மற்ற 6 போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. 
மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களில் ஓடுகின்ற பஸ்கள் பெரும்பாலும் ஓட்டை உடைசலாகவே உள்ளது.அதனால் 1666 புதிய பஸ்கள் வாங்குவதற்கு சாலை போக்குவரத்து நிறுவனம் டெண்டர் இறுதி செய்துள்ளது.நகரம் மற்றும் புறநகர் பகுதியில் பஸ் சேவையை மேம்படுத்தும் வகையில் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களுக்கு 367 பஸ்கள், மதுரை 350, விழுப்புரம் 344, கோவை 263, திருநெல்வேலி 242, சேலம் 84 பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்படுகிறது.மலைப் பகுதியில் இயக்குவதற்கு வசதியாக 16 சிறப்பு பஸ்கள் வாங்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பஸ் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக பஸ்கள் வாங்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.இதற்கான டெண்டர் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்படுகிறது. பி.எஸ்.Vi என்ஜின் வகை புதிய பஸ்களில் பொருத்தப்படுகிறது. இதில் பயணிகளுக்கு கூடுதலாக பல்வேறு வசதிகள் இடம்பெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.