காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
ஈரோடு மாவட்டத்தில் கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், இன்று (02-10-2023) மாவட்ட ஆட்சித்தலைவர்
ராஜ கோபால் சுன்கரா உத்தமர் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு காதி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தார் பின்னர்
கதர் சிறப்புத்தள்ளுபடி விற்பனை யினை தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 2 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 150 பெண் நூற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.225/- முதல் ரூ.250/- வரை ஊதியமாகப் பெறுகின்றனர். 2022-23-ம் ஆளர்டு ரூ.50.00 இலட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2022-234ம் ஆண்டு ரூ.206 இலட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது