காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், பாஜக அரசையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீதா லட்சுமி தலைமை வகித்தார் .
" உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ம், கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதுமான அளவு
நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் திறந்து விட மறுக்க காரணம் என்ன என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் இனியும் மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு
கோஷங்களை எழுப்பினர்காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், தமிழ்நாட்டுக்கான உரிமையை பெற்றுத்தராத ஒன்றிய பாஜக அரசையும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த திறனற்ற ஆளும் திமுக அரசையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் *சீமான்* அவர்களின் அறிவுறுத்தலின்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*.
நிகழ்விற்கு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.கி.சீதாலட்சுமி, மு.சத்யா,ஈரோடு மண்டல செயலாளர் நவநீதன்,ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் . தாண்டவமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.