நாகையில் மத்திய அதிவிரைவு படையினரைக் கொண்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது ,பதட்டமான இடங்களிம் மற்றும் கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் வஜ்ரா வாகனத்துடன் துப்பாக்கி ஏந்தியபடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் அணி வகுப்பு
கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) உதவி தளவாய் ராஜேஷ் தலைமையில், 6 பெண் அதி விரைவு படையினர் உட்பட 60 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளர் . இவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப. அறிக்கை செய்ததுடன், மாவட்டத்தில் பதற்றமான பகுதிகள் எவை,அடிக்கடிபிரச்சினைகள், கலவரங்கள், சாதிய மோதல்கள், ,உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதா என்ற தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ. கா. ப .கேட்டறிந்தனர்.தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்திலிருந்து வெளிப்பாளையம் காவல் நிலையம் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம், கருவிகள், நவீன எந்திரங்கள் கொண்ட வாகனத்துடன் துப்பாக்கி ஏந்தியபடி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ, கா, ப அவர்களின் தலைமையில் அணி வகுத்து சென்றனர். இந்த மத்திய அதிவிரைவு படையினர் நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு, சிபிசிஎல், நாகை கடற்படை அலுவலகம், மீனவ கிராமங்கள், பதற்றமான, கலவரம் நடக்கும் பகுதிகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியிலும் நாகை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்