மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.
September 10, 2023
0
உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்தரவின் பேரில், நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவுரையின் பேரில் பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார். பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல், தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கி னார். தொடர்ந்து பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிப்ப தற்கு பயன்படுத்திய 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.
Tags