உலக ரோஜா தினம் முதன் முதலில் கனடாவைச் சேர்ந்த 1996 இல் இறந்த 12 வயதான புற்றுநோய் நோயாளி மெலிண்டா ரோஸின் நினைவாக
உலக ரோஜா தினம்
கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆன்கோ பவுண்டேஷன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் லுமினா நினைவு அறக்கட்டளை இணைந்து உலக ரோஜா தினத்தை கொண்டாடும் விதமாக புற்று நோயாளிகளுக்கு உற்சாகப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கி ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் கார்த்திக், உலக ரோஜா தினம் கொண்டாடப்படுவதற்கான காரணத்தினை புற்று நோயாளிகளுக்கு எடுத்துரைத்து உற்சாகப்படுத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.லுமினா நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் ஆல்ட்ரின் ராஜ்குமார், புற்றுநோயாளிகளுக்கு ரோஜாப்பூ மற்றும் பரிசுகளை வழங்கி, புற்றுநோயை சரி செய்வதற்கு மருத்துவத்துறையில் பல்வேறு வகையான சிகிச்சை அளித்து வருவதாகவும், புற்றுநோயை பற்றி யாரும் கவலைப்படாதீர்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் எஸ்.எம்.சாதிக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையின் செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு புற்று நோயாளிகளுக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.