ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் அனைத்து பகுதிக ளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சூறாவளி காற் றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.பகல் நேரங்களில் வெயி லின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே போல் மாவட்டத்தில் உள்ள வன ப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி, தாளவாடி, ஆச னூர் உட்பட்ட வனப்பகுதி களில் நேற்று மாலை பரவ லாக மழை பெய்தது. இன்று காலை தாளவாடி வனப் பகுதி மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. தாளவாடி வனப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பசு மையை காண முடிகிறது. இதே போல் அந்தியூர் அருகே மைசூர் செல்லும் வழியில் பர்கூர் மலைப்பகுதி அமைந்துள்ளது.இந்த மலைப்பகுதியின் இரு புறங்களிலும் மரங்கள், செடி, கொடிகள் மீது மழை துளிகள் படர்ந்து பசுமை யாக காட்சி அளித்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு வித மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள். மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி இயற்கை அழகை ரசித்து விட்டு செல்கிறார்கள்.