ஈரோட்டின் NABH அங்கீகாரம் பெற்ற முதல் பல துறை மருத்துவமனையான லோட்டஸ் ஆஸ்பிட்டலின் மற்றொரு பிரம்மாண்டமான லோட்டஸ் மகளிர் மருத்துவம் மற்றும் அதிநவீன அறைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் லோட்டஸ் மகளிர் மருத்துவ பிரிவை துவங்கி வைத்தார். உடன் லோட்டஸ் ஆஸ்பிட்டலின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் B.K.சகாதேவன், துணைத் தலைவர் குமரன், மகளிர், மகப்பேறு மற்றும் கரு சிகிச்சை நிபுணர் டாக்டர்.E.S.உஷா, செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர்.ஸ்ருதி ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோட்டின் மேயர், துணை மேயர், உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஈரோட்டின் முதன்மை மருத்துவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், ரோட்டரி, அரிமா மற்றும் தொழில்முறை சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு ஈரோட்டின் மருத்துவ சேவை புதிய பரிமாண வசதிகளுடன் அமைந்திருப்பதாக வியந்து பாராட்டினார்கள்.