நாமக்கல் தாலுக்கா லாரி உரி மையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது
September 10, 2023
0
தேர்தல்நாமக்கல் தாலுக்கா லாரி உரி மையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன.தேர்தல் நாமக்கல்லை மையமாக கொண்டு லாரி உரிமையாளர்கள் சங்கமான நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளன. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தலைவர், செயலாளர், பொருளாளர், உதவி தலைவர், உதவி செயலாளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை எண்ணப்படும். தொடர்ந்து நாளை 11ந் தேதி காலை செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படஉள்ளன. இந்த நிலையில் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தற்போதைய செயலாளர் அருள் தலைமையில் ஒரு அணியினரும், தற்போதைய உதவித் தலைவர் சுப்புரத்திணம் தலைமையில் ஒரு அணியினரும் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி 1800 வாக்குகள் பதிவாகின. சங்க தேர்தல் நாமக்கல் பகுதி லாரி உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags