ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் IPS., உத்தரவின் பேரில், மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ரா அறிவுரையின்படி மதுவிலக்கு போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு சிவகிரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மதுவிலக்கு போலீசார் விரைந்து சென்று சிவகிரி அருகே கொள்ளாங்கோவில் கிளுவன்காடு வள்ளியம்பாளையம் மடத்து தெருவை சேர்ந்த நடராஜன், தனது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்துள்ளார் அவர் கஞ்சாவை விற்பனை செய்த குற்றத்திற்காக நடராஜனை கைது செய்து மதுவிலக்கு போலீசார் அவரிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவையும்,கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.