நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து சிப்காட் தொழிற்சாலை அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது.இந்த நிலையில் சிப்காட் தொழிற்சாலைக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலங்களை கொடுக்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், லத்துவாடி ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று ஒன்று திரண்டு கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் பாலசுப்பிரமணியம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, கொ.ம.தே.க. விவசாய பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ரவி, சிப்காட் எதிர்ப்பு குழு தலைவர் ராம்குமார், சரவணன், பழனிவேல், கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.