Type Here to Get Search Results !

மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த்...

   மாரிமுத்துஇறப்புஅதிர்ச்சி
யளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த்... 
மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 57. காலை, டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழில், கொம்பன். பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் தந்தை என 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அண்மையில், நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார்.
பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர்.எதிர்நீச்சல் என்ற நெடுந்தொடரில் நடித்ததன் மூலம், மக்களிடையே மிகவும் பிரபலமடைந்திருந்தார் மாரிமுத்து. இவர் பேசும் வசனங்கள் மீம்களாக மாறி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.