ஈரோடு, ரங்கம்பாளையம் , கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்தும், தசாவதாரம் வேடமிட்டும் காட்சியளித்தனர். மழலை செல்வங்கள் கண்கவர் வண்ணமிக நடனம் ஆடினார் கள். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. விழாவில் தலைவர் எம். சின்னசாமி, தாளாளர் கே. செல்வராஜ், பொருளாளர் ஆர். குணசேகரன், துணைத்தலைவர் ஆர். எம் தெய்வசிகாமணி மற்றும் முதல்வர் டி. நதியா அரவிந்தன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு குழந்தை களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி னர்.ஆசிரியர்கள்,அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்