Type Here to Get Search Results !

சேலத்தில் ஹேப்பி ஸ்டீரீட் கொண்டாட்டம்

சேலத்தில் ஹேப்பி ஸ்டீரீட் கொண்டாட்டம்

சேலம்:தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ேஹப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மற்றும் பணி புரியும் இளைஞர்கள், இளம்பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் ஏராளமானோர் இதில் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இைத தொடர்ந்து இன்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர் . பின்னர் அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்ப அவர்கள் உற்சாகமாக ஆடி, பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து டிரம்செட், பேண்ட் வாத்தியங்களும் அங்கு இசைக்கப்பட்டன. அந்த இசைக்கேற்ப அனைவரும் கைகளை உயர்திய படி ஆடி, பாடி அசத்தினர். மேலும் சர்ட்கள் அணிந்த படி ஆடி பாடிய இளைஞர்கள், இளம்பெண்கள் கலர் பேப்பர்களையும் வீசி, விசில் அடித்த படி உற்சாகத்துடன் துள்ளி குதித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இளம்பெண்கள் பலர் விசில்களை பறக்க விட்ட படி துள்ளி குதித்தது அனைவரையும் வியக்க வைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. சேலத்தில் முதல் நாளாக இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த பகுதியே களை கட்டியது. இதைெயாட்டி சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வணிகவரித்துறை அலுவலகம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளுக்கான மின் வயரில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது. இதனால் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு அந்த வயர்கள் சரி செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியதுடன் களை கட்டியது. மேலும் இந்த விழாவை மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடிவு செய்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.