ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரி கிராம விருது ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சியாக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சிக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும் 15 லட்ச ரூபாய் பரிசு தொகையையும், சான்றிதழும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. கௌரவிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை, கேடயத்துடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, குளூர் ஊராட்சி தலைவர் செல்வராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.