ஈரோடு வெள்ளோட்டில் பரிதவிக்கும் பெற்றோர்களுக்கு உதவி செய்த நண்பர்கள்
September 03, 2023
0
ஈரோடு வெள்ளோட்டில் பரிதவிக்கும் பெற்றோர்களுக்கு உதவி செய்த நண்பர்கள்
ஈரோடு மாவட்டத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப் பெருமான் சமூக சேவகர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இவர்கள் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை வருடா வருடம் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் தலைவர்களின் பிறந்த தினத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு அருகே வெள்ளோட்டில் அரிய வகை நோய் பாதிப்பால் கடந்த 19 வருடங்களாக வீட்டில் முடங்கிய சகோதரர்களின் மருத்துவ உதவிக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் நிலைமையை அறிந்து அவர்களின் மருத்துவ செலவிற்காக 27 ஆயிரம் ரூபாய் பணத்தை, பாதிப்பில் இருக்கும் நபர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கினார்கள். ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப்பெருமாள் சமூக சேவகர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்கள் இதுபோன்று பல்வேறு உதவிகளை செய்து வரும் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருக பெருமான் சமூக சேவகர்கள், கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தனது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.மேலும் நண்பர்கள் கூறும் பொழுது நாங்கள் இவர்களுக்கு செய்யும் உதவியை கண்டு பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் தாமாக முன்வந்து உதவி செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
Tags