தமிழ்நாட்டில் உள்ள 4550 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் MSC/ AIF திட்டத்தின் கீழ் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்வேறு விதமான தேவையற்ற வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கூறி கூட்டுறவு துறையில் வற்புறுத்தப்பட்டு வருகிறது. விவசாய நோக்கத்திற்கு என ஆரபிக்கப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள், தேவையற்ற பணிகளை மேற்கொள்வதால் ஏற்கனவே சங்கங்கள் கடன் தள்ளுபடியால் கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் நிலையில், மென்மேலும் அழிவை நோக்கி செல்ல கூடிய சூழ்நிலை ஏற்படும்.
என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட 147 தொடக்க வேளாண்ணம் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்கள் என திரளாக கலந்துகொண்டு மாவட்ட கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.