கக்கன்ஞ்சி நகர் கொங்கு கல்வி நிலையம் நர்சரி & பிரைமரி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சனமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் ராதை கிருஷ்ணன் வேடம் அணிந்தும், தசாவதாரம் வேடமிட்டும் காட்சியளி த்தார்கள் . பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக் காட்சி யாக இருந்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர் . பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டுகளை அள்ளிச் சென்றது. விழாவில் தலைவர் எம் சின்னச்சாமி , தாளாளர் கே செல்வராஜ் , பொருளாளர் ஆர் குணசேகரன் , துணை தலைவர் ஆர். எம். தெய்வசிகாமணி மற்றும் முதல்வர் பி. வனிதா சுப்புலட்சுமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டை தெரிவித்தனர். ஆசிரியர்கள் ,அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்