Type Here to Get Search Results !

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக முதலமைச்சருக்கு கடிதம்

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக முதலமைச்சருக்கு கடிதம்

 ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் சிறு தொழில்களின் நிலை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தக்க நடவடிக்கை மேற்கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் சார்ந்துள்ள குடும்பங்களையும் காப்பாற்றுமாறு ஈரோடு மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இந்தக் கடிதத்தில் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொது கோரிக்கைகளான:-
 மின் நுகர்வோருக்கான நிலை கட்டணம் ஒரே பிரிவில் பழைய கட்டணமான
ரூ.35க்கு மாற்றி அமைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும், மின் நுகர்வோர்களுக்கு பீக் ஹவர் சார்ஜஸ்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள எல்.டி-3எ-1 டேரிஃபை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மேற்கூரை சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு மல்டி இயர் தயாரிப்பை உடனடியாக ரத்து செய்வதுடன் சிறு குழு மற்றும் நடுத்தர தொழில்துறையின் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மின்சார மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக சங்க தலைவர்
தனசேகரன் தலைமையில் உறுப்பினர்களுடன் இணைந்து ஈரோடு மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.