Type Here to Get Search Results !

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன்,சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விஜய்தான் சூப்பர் ஸ்டார்; லியோவில் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி...: நடிகர் ராமகிருஷ்ணன். 2வது நாளில் உலகம் முழுவதும் ரூ. 240.47 கோடி வசூலானது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. செப்.7ஆம் தேதி வெளியான படம் இன்றோடு 4வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
சச்சின் சாதனையை முறியடித்த வார்னர்!கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உள்ளது. 3ஆம் நாள் முடிவில் ரூ.350 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஞாயிற்றுக் கிழமை மட்டும்ரூ. 44.5 கோடி அளவுக்கு முன்பதிவு வாயிலாகவே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனி, ஞாயிறுகளில் கூடுதல் மக்கள் திரையரங்குகளை நோக்கி செல்வதால் இன்றைய நாள் முடிவில் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இன்று மாலை படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.பதான் படத்தின் சாதனையை முறியடிக்கும் என பாலிவுட் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.